கொரோனா வைரஸ் பாதிப்பு பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வரும்
வேளையில், கொரோனா வைரஸ் பாதிப்பை தவிர்க்க தமிழக அரசு முன்னெச்சரிக்கை
எடுக்க தவறிவருவதாக நிபுணர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

சமீபத்தில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்தது. இதற்கு காரணம் இத்தாலியிலிருந்து சுற்றுலா வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருந்தது. அவரை விமான நிலையத்தில் கண்டுபிடித்து தடுக்கத் தவறியதன் விளைவு, அவருடன் வந்த மற்ற இத்தாலியப் பயணிகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்களுக்கு வண்டி ஓட்டிய இந்திய டிரைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளவர்கள் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது. ஆறு மாநிலங்களுக்கு கொரோனா எச்சரிக்கைவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு தன்னுடைய பணியை சரிவர செய்யாததால் திடீரென்று கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது.
மத்திய அரசு செய்த அதே தவற்றைத்தான் தமிழக அரசும் செய்து வருவதாக
தொற்றுநோய் தடுப்பு நிபுணர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். வட இந்தியாவில்
டிரைவருக்கு கொரோனா வைரஸ் வந்துள்ளது. ஆறு மாநிலங்களுக்கு
எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது... ஒருவேளை கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள
ஒருவர் ரயில் மூலம் தமிழகம் வந்திருந்தால் என்ன ஆவது? விமான நிலையங்களை
எல்லாம் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டுவந்த தமிழக அரசு ரயில்
நிலையங்கள், முக்கிய பஸ் நிலையங்களை எல்லாம் மருத்துவர்களின் கண்காணிப்பின்
கீழ் கொண்டுவந்துள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
கேரளாவில்தான் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு வேறு ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு அவர் தமிழகம் வந்தால் என்ன ஆவது... மாநில எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதா என்று அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர். விமான நிலையங்களைப் போல ரயில் நிலையங்களும் மிகவும் முக்கியமானவை... லட்சக்கணக்கான மக்கள் தினமும் வந்து செல்லும் இடம். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக் கணக்கில் தினமும் வந்து செல்கின்றனர். எனவே, எந்த வகையிலும் கவனக்குறைவாக இருந்துவிடாமல் முன்னெச்சரிக்கையாக செயல்பட வேண்டும் என்று மருத்துவர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

மிகப் பெரிய, வல்லரசு நாடானா சீனாவாலேயே கொரோனா பாதிப்பை சமாளிக்க
முடியவில்லை... தொழில் துறையே முடங்கிக்கிடக்கிறது. பக்கெட்டில் எண்ணெய்
அள்ளிய அனுபவம்தான் நமக்கு எல்லாம்... எனவே, அரசு விழிப்புடன் இருப்பது
எல்லோருக்கும் நல்லது!
No comments:
Post a Comment