Latest News

எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லை; தெலுங்கானா முதல்வர் ஆவேசம்

ஐதராபாத் : எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது ஏழை எளிய மக்களிடம் எப்படி பிறப்பு சான்றிதழ் இருக்கும் என தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார்.குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றிற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன. இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் கூறியதாவது : இப்போது வரை எனக்கு பிறப்புச் சான்றிதழ் கிடையாது. எனக்கே பிறப்புச் சான்றிதழ் இல்லாத போது என் தந்தையின் பிறப்புச் சான்றிதழை எப்படி காண்பிக்க முடியும். அப்போது நான் இறந்துவிடலாமா. சிஏஏ, என்ஆர்சி, என்பிஆரை கடுமையாக எதிர்க்கிறேன். நான் பிறந்தபோது 580 ஏக்கர் நிலமும் ஒரு வீடும் இருந்தது. நான் என் வீட்டில் தான் பிறந்தேன். என்னாலேயே பிறப்புச் சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதபோது ஏழை மற்றும் பாமர, பட்டியலின மக்களால் எப்படி பிறப்புச் சான்றிதழை காட்ட முடியும்.இது போன்ற கடுமையான சட்டங்களால் நாடு அமைதியை இழந்து கொண்டிருக்கிறது. இது மதபாகுபாடு கொண்டதாகவும் உள்ளதால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பு சரிந்துள்ளது. விரைவில் சிஏஏ, என்ஆர்சி-க்கு எதிராக தெலுங்கானா சட்டசபையில் விரைவில் தீர்மானம் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.