
மக்களுக்கு தேவையானதை தான் சட்டமாக இயற்ற வேண்டும், சட்டத்தை
இயற்றிவிட்டு மக்களை அதற்குள் இருக்குமாறு கட்டாயப்படுத்தக்கூடாது என்று
நடிகர் விஜய் சிஏஏவை குறிப்பிடாமல் அதற்கு எதிராக பேசியுள்ளார். மாஸ்டர்
பட விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவரிடம்
தற்போதைய தளபதி விஜய் 20 வருடங்களுக்கு முன்பிருந்த இளையதளபதியிடம் ஏதாவது
கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள் என்று தொகுப்பாளினி பாவனா கேள்வி
எழுப்பினார். இதற்கு நடிகர் விஜய், இளையதளபதியாக இருக்கும் போதும் வாழ்கை
அமைதியாக இருந்தது ரைடு இல்லாமல் என்று கூறினார்.
ஏனென்றால் மத்திய அரசு
அண்மையில் இயற்றிய சட்டம் சிஏஏ தான். இந்த சட்டத்திற்கு எதிராகத்தான்
இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர். இந்த சூழலில் சிஏஏ பற்றி குறிப்பிடாமல்
பட விழாவில் நடிகர் விஜய் அரசியல் பேசியுள்ளார்.
இதே போல் மக்களுக்கு தேவையானது எதுவோ அதைத்தான் சட்டமாக இயற்ற வேண்டும் என்று விஜய் கூறினார்.
சட்டத்தை இயற்றிவிட்டு அதற்குள் மக்களை அடைக்க கூடாது
என்றும் விஜய் தெரிவித்தார். விஜய் இப்படி பேசியது சிஏஏவைப்பற்றித்தான்
என்று யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை.,
No comments:
Post a Comment