Latest News

முதலமைச்சர் பழனிசாமி தனக்கு பிறப்புச்சான்றிதழே இல்லை என என்னிடமே கூறியுள்ளார்- சீமான்

திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் தொடர் போராட்டம் நடைப்பெற்று வருகிறது. 21 வது நாளாக இன்று போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆதரவு தெரிவித்து பேசினார்.
அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த சீமான், "என்.பி.ஆருக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தமிழக அரசும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனக்கு பிறப்புச்சான்றிதழ் இல்லை என என்னிடமே கூறியுள்ளார். நம் நாட்டின் குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் கூட பிறப்புச்சான்றிதழ் இருக்காது. சி ஏ ஏ சட்டம் முஸ்லிம்களுக்கு மட்டும் எதிரானது அல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கு எதிரானது. இந்த சட்டத்தில் இருக்கும் நடைமுறையால் ஒட்டுமொத்த மக்களே முகாமுக்கு செல்ல வேண்டிய நிலை தான் வரும். இந்தியாவிற்குள் இனிமேல் அகதிகளாக வருபவர்களுக்கு குடியுரிமை தர மாட்டோம் எனக் கூறலாமே தவிர, ஏற்கனவே வந்தவர்களுக்கு குடியுரிமை தர மாட்டம் குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு தரமாட்டோம் என கூறுவதுதான் பாசிசம்.
ட்ரம்ப் - மோடி ஆகியோர் ஒரே சிந்தனை கொண்டவர்கள் என்பதால் இந்தியாவிற்கு வந்தபோது சி.ஏ.ஏ சட்டம் குறித்து எதுவும் பேசாமல் சென்றுள்ளார். நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருந்து கொண்டு உள்ளது, ஆனால் அவற்றை பேசவிடாமல் சி.ஏ.ஏ சட்டத்தை நிறைவேற்றி அதை மட்டுமே நம்மை பேச வைத்துக் கொண்டுள்ளார்கள். இனிமேல் ஆயுதங்களை ஏந்தி போரிடுவதற்கு பதிலாக உயிரியல் போர்கள்(BIO-WAR) தான் நடக்கும். அதில் ஒன்றுதான் இந்த கொரானா வைரஸ். உலகம் பேரழிவை நோக்கி சென்று கொண்டிருப்பதை இது காட்டுகிறது" எனக் கூறினார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.