
போபால்: செவ்வாயன்று நம்பிக்கை
வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய பிரதேச முதல்வர் கமல்நாத்திற்கு
மாநில ஆளுநர் லல்ஜித் டாண்டன் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய
பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.
கடந்த 10-ஆம் தேதியன்று காங்கிரசின் முக்கிய தலைவர் ஜோதிராதித்ய சிந்தியா
அக்கட்சியில் இருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். அவருக்கு ஆதரவாக 22
காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தங்களது பதவியை ராஜிநாமா செய்தனர். இதன்
காரணமாக காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் உண்டானது.
எனவே காங்கிரஸ் அரசு அவையில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.
அதன்படி கமல்நாத் திங்களன்று நமபிக்கை வாக்கெடுப்பு
கோருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆளுநர் லல்ஜித் டாண்டனும் அவ்வாறே
கமல்நாத்திற்கு தான் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால்
அவ்வாறு நமபிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில்
செவ்வாயன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று மத்திய பிரதேச
முதல்வர் கமல்நாத்திற்கு மாநில ஆளுநர் லல்ஜித் டாண்டன் மீண்டும் ஓர் கடிதம்
எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், 'திட்டமிட்ட காலத்தில்
நீங்கள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. இது
எந்த ஒரு அடிப்படையுமே இல்லாத செயலாகும். அதற்காக நீங்கள் குறிப்பிட்டுள்ள
காரணங்கள் ஏற்கத்தக்கதாக இல்லை. எனவே நீங்கள் வரும் 17-ஆம் தேதி அவையில்
உங்களது பெரும்பான்மையையே நிரூபிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால்
உங்கள் ஆட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்றே கொள்ள வேண்டி வரும்' என்று
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment