சிங்கப்பூர்: கொரோனா பரவுவதை தடுக்க கைகளை சுத்தமாக கழுவி வர வேண்டும்.
முகத்தில் கை படக்கூடாது என்று சிங்கப்பூர் சுகாதார துறை அமைச்சர் கான்
கிம் யோங் யோசனை தெரிவித்துள்ளார்சிங்கப்பூரில் நடந்த பார்லி கூட்டத்தில்
அவர் மேலும் பேசியதாவது , 'மெர்ஸ் மற்றும் சார்ஸ் வைரஸ் வகையை சேர்ந்தது
கொரோனா. சாதாரணமாக சளி ஏற்படுத்தக் கூடிய வைரஸிலிருந்து சற்று வேறுபட்டவை
இவை. இது சார்ஸ் வைரஸை காட்டிலும் வேகமாக பரவக் கூடியது.தும்மல் மற்றும்
இருமலின் போது வெளிப்படும் நீர்த்திவளைகள் மூலம் இது பரவுவதாக ஆதாரபூர்வமாக
அறியப்பட்டுள்ளது. தும்மல் மற்றும் இருமலின் போது அருகில் உள்ளவர்களுக்கு
இது எளிதில் தொற்றி விடுகிறது. கண்கள் மற்றும் காதுகள் வழியாக இது
மற்றவர்களுக்கு பரவுகிறது.
இது காற்றில் பரவுவதற்கு இதுவரை ஆதாரம் இல்லை. எப்படி
பரவுகிறதுகொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதும் அல்லது
இருமும் போதும் வெளிப்படும் நீர்த்திவளைகள் பொருட்கள் மீது படுகின்றன. இவை
டேபிள், சேர்கள் மீது பட்டாலோ, அந்த பொருட்களின் மீது நாட்கணக்கில்
படிந்திருக்கும். யாராவது அப்பொருட்களை தொட்டால் அவர்களுக்கும் தொற்றி
விடுகிறது.
அவர்கள் தங்கள் கைகளை கண்கள், வாய்ப்பகுதியில் படும் படி வைத்தால் கொரோனா எளிதில் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. அதனால் கைகளை சுத்தமான நீரில் அடிக்கடி கழுவி வர வேண்டும்.வழக்கமாக நாம் எல்லோரும் நம் கைகளை நம்மையும் அறியாமல் முகத்தில் படும்படி வைத்து விடுகிறோம். இதை நாம் தடுக்க வேண்டும். இது எளிமையான விஷயம்.
ஆனால் கடைப்பிடிப்பது கொஞ்சம் கஷ்டம். இருந்தாலும் கொரோனாவை தடுக்க நாம் இதை கடைப்பிடிக்க வேண்டும். மாஸ்க் அணிவதால் மட்டும் தடுத்து விட முடியாது. மாஸ்கை நாம் அடிக்கடி சரி செய்யும் போது கூட கொரோனா தொற்றி விட வாய்ப்பு உள்ளது. எனவே, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றவர்களுக்கு பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்' இவ்வாறு அவர் பேசினார்

No comments:
Post a Comment