
கரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வித
தாக்கமும் ஏற்படவில்லை என நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர்
தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில்
மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு
வருகின்றன. தமிழகம் உட்பட சில மாநிலங்களில் வணிக வளாகங்கள், திரையரங்குகள்,
கேளிக்கை விடுதிகள் உள்ளிட்டவை மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும் என
உத்தரவிடப்பட்டுள்ளது. அவசியமற்ற போக்குவரத்தைத் தவிர்க்க வேண்டும் என
பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில்,
கரோனா வைரஸ் காரணமாக இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படும் தாக்கம் தொடர்பான
கேள்வியை மாநிலங்களவை உறுப்பினர் வைகோ எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த நிதித் துறை இணை அமைச்சர் அனுராக்
தாக்கூர், "சமீபத்திய தரவுகளின்படி இந்தியப் பொருளாதாரத்தில் எவ்வித
பாதகமான தாக்கமும் ஏற்படவில்லை. கூடுதலாக, கரோனா வைரஸ் காரணமாக சர்வதேச
எண்ணெய் விலை சரிவால் இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கம்
ஏற்படலாம்" என்றார்.
No comments:
Post a Comment