
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் குரேஷியா நாட்டினை
தாக்கியுள்ளது. இதுவரை 206 பேரை கொரோனா வைரஸ் தாக்கியுள்ள அந்த நாட்டில்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா வைரஸிற்கு பயந்து மக்கள்
வீட்டிற்குள்ளே முடங்கி இருக்கும் இந்த சமயத்தில் அந்நாட்டின் தலைநகரான
ஷக்ரெபாவில் இன்று காலை 6 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர்
அளவில் 5.3 அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு வீடுகள்,
மருத்துவமனைகள், ஆலயங்கள் போன்றவை சேதமடைந்துள்ளன. ஒருவர் பலியாகியுள்ளார்.
140 வருடங்களில் இந்த நகரில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலநடுக்கம் இதுவாகும்.
இந்த
நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். மக்கள்
கூடுவதால் கொரோனா வைரஸ் பரவும் அச்சமும் உள்ளது. இதனால் மக்கள் வெளியில்
இருந்தாலும் தங்களுக்குள் இடைவெளியினை பின்பற்றுமாறு கவர்னர்
அறிவுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment