மேட்ரிட்: கொரோனா வைரசால் இத்தாலிக்கு அடுத்த படியாக ஐரோப்பாவில் மிக
மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உள்ளது. 'கடந்த 24 மணி நேரத்தில்,
கொரோனா தொற்றால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 514 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, 2,991 பேர் உயிரிழந்துள்ளனர்; 42,058 பேருக்கு கொரோனா தொற்று
இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது' என, ஸ்பெயின் சுகாதாரத்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது. இதுகுறித்து, ஸ்பெயின் பாதுகாப்புத் துறை அமைச்சர்
மார்கரிட்டா ரோபல்ஸ் தெரிவித்துள்ளதாவது: முதியோர் இல்லங்களில்
தங்கியிருந்த சில முதியவர்கள், கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவுடன்,
அதன் ஊழியர்கள் முதியவர்களை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இதையடுத்து, முதியோர் இல்லங்களில் ராணுவத்தினர் சோதனையில்
ஈடுபட்டனர். சில இல்லங்களில், முதியவர்கள் கவனிப்பின்றி கைவிடப்பட்ட
நிலையில் இருந்ததும்; கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்து கிடந்ததும்
தெரியவந்துள்ளது.அவர்களது உடல்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக
வைக்கப்பட்டுள்ளன. கைவிடப்பட்ட முதியவர்களுக்கு மருத்துவ உதவிகள்
செய்யப்பட்டுள்ளன. முதியோர் இல்லங்கள் மீது அரசு தனிக் கவனம்
செலுத்தவுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.முதியவர்களின் உடல்களை
அதிகாரிகள் எடுத்துச் செல்லும் படங்களில் படங்கள் இணையத்தில் வைரலாகி
வருகின்றன.
ஊரடங்கில் உலாஇந்நிலையில், ஸ்பெயினில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மருத்துவமனைகளில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்த பலரும், மருத்துவர்களின் அனுமதி இன்றி தப்பிச் சென்றுள்ளனர். மேலும், கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அரசு விதித்த கட்டுப்பாடுகளையும் ஊரடங்கையும் ஸ்பெயின் மக்கள் மீறி, சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். இதனால் ஸ்பெயினில் கொரோனா பாதிப்பு பல மடங்கு அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது. விதிமீறுவோரை அந்நாட்டு காவல் துறையினர், 'பொறுப்பற்ற மக்கள்' என, விமர்சித்துள்ளனர்.'ஸ்பெயின் மக்கள் ஆபத்தை உணர்ந்து, அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால், கொரோனாவுக்கு அதிக உயிர்களை பலி கொடுக்க நேரிடும்' என, உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment