
கடந்த வாரம் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 47 ஆக
அதிகரித்த நிலையில் இந்திய முஸ்லிம்களின் மீது திட்டமிட்ட தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது என்று இரானின் வெளியுறவு துறை அமைச்சர் மொஹம்மத் ஜாவித்
சரீஃப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அனைத்து
இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் வேண்டுமென்றே
வன்முறையில் ஈடுபடும் நபர்களை தடுக்க வேண்டும் என்றும் இரான் வெளியுறவு
அமைச்சர் இந்திய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இனி வரும்
காலங்களில் அமைதிப் பேச்சு வார்த்தை மற்றும் சட்டத்தின் படி மட்டுமே
செயல்பட வேண்டும் என்று அமைச்சர் சரீஃப் தனது டிவிட்டர் பக்கத்தில்
பதிவிட்டிருந்தார்.
https://m.dailyhunt.in
No comments:
Post a Comment