
மதுரை: எளிய முதல்வர் என கூகுளில்
தேடிப்பார்த்தால் முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும் என்று தமிழக அமைச்சர்
ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரை
திருப்பரங்குன்றத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா
நலத்திட்ட வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டார். நிகழ்ச்சி முடிந்த பின்னர்
செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
பிறக்கும்
கருவிற்கு கூட நலத்திட்டங்களை வகுத்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா .
ஜெயலலிதாவிற்கு கிடைத்த தொண்டர்கள் போல் நாட்டில் வேறு யாருக்கும்
கிடைக்கவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
பதவியேற்றபோது ஒரு வாரம் மட்டுமே ஆட்சி நிலைக்கும் என எதிர்க்கட்சிகள்
கூறிய நிலையில் அதனை தகர்த்து இந்திய திருநாட்டிற்கே வழிகாட்டியாக
திகழ்கிறார் தமிழக முதல்வர். எளிய முதல்வர் என கூகுளில் தேடிப்பார்த்தால்
முதல்வர் பழனிசாமி பெயர்தான் வரும்
இனிவரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதிமுக தான் வெற்றிபெறும்
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment