டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த
நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை மத்திய அரசு கடந்த மாதம் 25ம் தேதி
அமல்படுத்தியது. இருப்பினும் கொரோனாவின் தாக்கம் குறையவில்லை. அதன்
பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இது தொடர்பாக மத்திய
சுகாதாரத்துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் செய்தியாளர்களை சந்தித்து
பேசினார். அப்போது; இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 909 பேருக்கு
கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம்
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8356-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி
நேரத்தில் கொரோனவால் 34 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் இதுவரை
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 273-ஆக அதிகரித்துள்ளது.
பாதிக்கப்பட்ட மொத்த ரத்த மாதிரிகளில் 4.3 சதவீதம் கொரோனா
உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக பிரத்யேகமாக அமைக்கப்படும்
மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். தனியாருடன் இணைந்து மத்திய
அரசு கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. தனியார்
மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்காக கூடுதல் படுக்கைகளை ஏற்படுத்தி
வருகிறது. கொரோனாவை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. தீவிர சிகிச்சை,
ஆக்சிஜன் தேவை என அனைத்திலும் அரசு கவனமாக உள்ளது. கொரோனா நோயாளிக்கு
சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 1.05 லட்சம் படுக்கைகள் தயாராக உள்ளன.
நாடு முழுவதும் இதுவரை 1.86 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. ராணுவ மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 9000 படுக்கைகள் தயாராக உள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை 219 மையங்களில் மேற்கொள்ளப்படுகின்றன. கொரோனா பாதிப்பை கண்டறிய நாள்தோறும் 15,700 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. கொரோனா பாதித்தவர்களில் 20% சதவீதம் பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 1,671 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை தரப்படுகிறது. 13 நாடுகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயினை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது எனவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment