Latest News

ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே

புதுடில்லி: ஏப்.,15க்கு பிறகான ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவே இல்லை என ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பஸ், ரயில், விமான உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பயண முன்பதிவு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்.,14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடுமா என்ற ஆவலும் சந்தேகமும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. ஆனால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ரயில்வே அமைச்சகத்தின் டுவிட்டர் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: சில ஊடகங்கள், ஏப்.,15க்கான ரயில் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளன. அது தவறானது. ஊரடங்கு நாட்களான மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை தவிர்த்து மற்ற நாட்களில், ரயில் டிக்கெட்கள் முன்பதிவு செய்வது நிறுத்தவில்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்கிறோம். அதே நேரத்தில், ஊரடங்கு நாட்களான மார்ச் 24 முதல் ஏப்.,14 வரையிலான காலகட்டத்தில் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டன.

அதற்கு பிந்தைய நாட்களில் (ஏப்.,15 முதல்) 120 நாட்கள் கால வரம்புக்கு உட்பட்ட நாட்களில் முன்பதிவு செய்வதை நிறுத்தி வைக்கப்படவே இல்லை. இவ்வாறு ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.Certain media reports have claimed that Railways has started reservation for post-lockdown period. It is to clarify that reservation for journeys post 14th April was never stopped and is not related to any new announcement. pic.twitter.com/oJ7ZqxIx3q- Ministry of Railways (@RailMinIndia) April 2, 2020

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.