
சென்னை: கொரோனா பாதிப்பு அளவை குறிக்கும் வகையில் தமிழக மாவட்டங்களுக்கு நிறக் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அளவை குறிக்கும் வகையில் தமிழக மாவட்டங்களுக்கு நிறக்
குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் அளவுக்கு ஏற்ப சிவப்பு,
மஞ்சள், பச்சை என மாவட்டங்களுக்கு நிறம் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் சென்னை, கோவை, ஈரோடு, நெல்லை, திண்டுக்கல், நாமக்கல்,
செங்கல்பட்டு, தேனி, திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருப்பூர்,
மதுரை, தூத்துக்குடி, நாகை, கரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு
சிவப்பு நிறம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏனெனில் இந்த மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகளவில் காணப்படுகிறது.
அதேபோல திருப்பத்தூர், கடலூர், கன்னியாகுமரி, சேலம், திருவாரூர்,
விருதுநகர், தஞ்சை, திருவண்ணாமலை, வேலூர் ஆகிய 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்
நிறம் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீலகிரி காஞ்சிபுரம், சிவகங்கை,
தென்காசி, கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், அரியலூர், பெரம்பலூர் ஆகிய
மாவட்டங்களுக்கு மஞ்சள் நிறம் தரப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த மாவட்டங்களில்
கொரோனா பாதிப்பு மிக குறைவாக காணப்படுகிறது.
No comments:
Post a Comment