
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தக்கூடிய
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை தந்து உதவ வேண்டும் என இந்தியாவிடம் 30
நாடுகள் இதுவரை கோரிக்கை விடுத்துள்ளன.
உலகம் முழுவதும்
கொரோனா பாதிப்புகள் 14 லட்சத்தை எட்டியுள்ள நிலைநிலையில், 69,500 பேர்
உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பியைக் கட்டுப்படுத்த
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தைப் பயன்படுத்தலாம் என அமெரிக்கா உள்பட
பல்வேறு நாடுகளும் அறிவித்தது.
கொரோனா
வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலேரியா காய்ச்சலுக்குப்
பயன்படுத்தப்படுத்தப்படும் ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து வழங்கலாம் என
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் பரிந்துரை செய்தது.
மேலும் கொரோனா பாதிப்பு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்
மற்றும் மருத்து ஊழியர்களும் இதை தடுப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் எனவும்
அறிவித்தது.
இந்த பரிந்துரைக்குப்பின், ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை ஏற்றுமதியை மத்திய அரசு கடந்த மாதம் 25ஆம் தேதி தடை விதித்தது. இதனால் பல்வேறு நாடுகளுக்கான ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரை ஏற்றுமதி கடுமையாக பாதித்தது.
இதனையடுத்து, தங்கள் நாடுகளுக்கு மனிதாபிமான
அடிப்படையில் மாத்திரைகளை ஏற்றுமதி செய்து இந்தியா உதவ வேண்டும் என
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல், பிரேசில் உள்ளிட்ட 30 நாடுகள்
இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
தெரிவித்துள்ளது.
மாலத்தீவு,
சீனா போன்ற நாடுகளுக்கு மருத்துவ நிவாரண உதவிகளை இந்தியா வழங்கியுள்ள
நிலையில், மாத்திரை ஏற்றுமதி மீதான தடை நீக்கப்பட வாய்ப்புள்ளதா எனக்
கேட்டபோது, இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து
வரும் நிலையில்உள்நாட்டின் தேவையை பூர்த்தி செய்த பிறகே மாத்திரை ஏற்றுமதி
தொடர்பாக முடிவு எடுக்கமுடியும். இது தொடர்பான ஆலோசனைகள் நடைபெற்று
வருகிறது என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் துணை இயக்குநர்
டாக்டர். ரமன் கங்காகேட்கர் தெரிவித்துள்ளார்.
newstm.in
No comments:
Post a Comment