
கொரோனா பாதித்த மருத்துவருடன் தொடர்பில் இருந்த அதிகாரியுடன்
தொடர்பில் இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய உள்துறை
அமைச்சகத்தின் மூத்த பாதுகாப்பு ஆலோசகர் கே விஜயகுமார் ஐபிஎஸ் தன்னை தானே
தனிமைப்படுத்திக் கொண்டார்.
சந்தன கடத்தல் வீரப்பனை சுட்டுக்
கொன்றதன் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமானவர் விஜயகுமார் ஐபிஎஸ். சர்வீஸ்
ரிட்டயர்மெண்ட் ஆனாலும் அண்மையில் உள்துறை அமைச்சகத்தில் மூத்த பாதுகாப்பு
ஆலோசகராக இருக்கிறார். அதுமட்டுமன்றி ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம்
தொடர்பான விவரங்களையும் கவனித்து வருகிறார்.

இந்நிலையில்
சமீபத்தில் கொரோனா பாதித்த சிஆர்பிஎப் மருத்துவர் ஒருவருடன் விஜயகுமார்
கடந்த 23ம் தேதி தொடர்பில் இருந்திருக்கிறார்.
இதனை அடுத்து அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை
தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. அதேபோல்
சிஆர்பிஎப் படையின் மருத்துவர் ஒருவருக்கும் கொரோனா உறுதியாகி இருக்கிறது.
அதனால் சிஆர்பிஎப் இயக்குனர் மகேஸ்வரியும் தம்மைத் தானே தனிமைப்படுத்தி
கொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment