Latest News

வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு உரிய சலுகை வழங்க வேண்டும் டிடிவி தினகரன்

கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக மின் பயன்பாடு கணக்கெடுக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படவில்லை. எனவே, முந்தைய கட்டணத்தையே செலுத்துமாறு மின் வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறு செலுத்திய கட்டணம், பின்வரும் மாத கணக்கீட்டு மின் கட்டணத்தில் சரிசெய்யப்படும் என்றும் கூறியிருந்தது.

இந்நிலையில், மின்வாரியத்தின் மின்கட்டண வசூல் நடைமுறையானது பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு சிரமத்தை தரும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

'கடந்த முறை செலுத்திய அதே மின்கட்டணத்தை இந்த முறையும் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது வீடுகளுக்கு சரியாக இருக்கலாம். ஆனால் 15 நாட்களுக்கும் மேலாக சிறு குறுதொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டிருப்பதால் பணப்புழக்கம் இல்லாத வணிகர்களுக்கு இது சிரமத்தை தரும். எனவே வணிகரீதியான மின் இணைப்புகளுக்கு கட்டணத்தொகை மற்றும் கால அவகாசத்தில் உரிய சலுகை வழங்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.