Latest News

முதியவர் மரணம்; போலீஸார் மீது குற்றச்சாட்டு? - திடீர் போராட்டத்தால் அதிர்ந்த கருப்பாயூரணி

காவல்துறை தாக்கியதில் முதியவர் ஒருவர் மரணமடைந்ததாகப் புகார் கூறி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில், அவர் இயற்கையாக மரணம் எய்தியதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் போராட்டம்
மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த அப்துல் ரகீம், கோழிக்கடை வைத்துள்ளார். இன்று காலை அவர் தன் உறவினர் முகமது சேட்டுடன் வீட்டு வாசலில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது அப்பகுதியில் ரோந்து வந்த காவல்துறையினர் எச்சரித்ததாகவும் தகவல் வெளியானது. போலீஸாருக்கு அவர்கள் பதில் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த காவலர்கள் சிலர், ரகீமைத் தாக்கியதாகவும் கூறப்பட்டது.

காவல்துறையினர் தாக்கியதால் முதியவரான அப்துல்ரகீம் மரணமடைந்துவிட்டதாக அவருடைய உறவினர்கள் புகார் எழுப்பினர். மேலும், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருப்பாயூரணி பகுதியில் இன்று காலை தீடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்துல் ரகீம்
இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தை பல்வேறு அமைப்பினரும் கண்டிக்கத் தொடங்கினார்கள். இந்தநிலையில் வருவாய்த்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இது சம்பம்பந்தமாக விசாரணை நடத்தப்படும் என்று போராட்டம் நடத்தியவர்களிடம் உறுதி அளித்தனர்.

இந்தநிலையில், மரணமடைந்த அப்துல்ரகீமின் மருமகன் முகமது சேட்,``என் மாமனார் இயற்கை எய்துவிட்டார். அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்யாமல் மத வழக்கப்படி இறுதிக் காரியம் செய்ய ஒப்படைக்கவும்'' என்று காவல்துறையினரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
மக்கள் போராட்டம்
இதுபற்றி விசாரித்தபோது, `கொரோனா தொற்று பரவி வரும் நேரத்தில் இப்பிரச்னையைப் பெரிதாக்க வேண்டாம், மரணமடைந்துவிட்டவரை போலீஸுடன் பிரச்னை செய்யாமல் அடக்கம் செய்வோம்' என்று குடும்பத்தினர் முடிவெடுத்துள்ளதாகக் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.