
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிகத் தீவிரமாக பரவி மனித இனத்தையே
ஆட்டிப்படைத்து வருகிறது. பாமரன் முதல் பதவியில் இருப்பவர்கள் வரை, ஏழை
முதல் கோடீஸ்வரர்கள் வரை இந்த வைரஸ் தாக்கி வருகிறது என்பது
குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா
நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் நர்சுகள் மற்றும்
மருத்துவ ஊழியர்களுக்கும் கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தி உள்ளது
அந்த வகையில் ஆந்திராவை சேர்ந்த 60 வயது
டாக்டர் ஒருவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர் சமீபத்தில்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு
மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்து வந்த நிலையில்
சிகிச்சை பலனின்றி அவர் இன்று பலியானார்
இதனையடுத்து அவருடைய உடல் அம்பத்தூர் அருகே உள்ள மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
ஆனால் அந்த பகுதி மக்கள் கொரோனா பாதித்த ஒருவரை தங்கள்
பகுதியில் தகனம் செய்ய கூடாது என எதிர்ப்பு தெரிவித்ததால் பெரும் பரபரப்பு
ஏற்பட்டது
இந்த நிலையில் கொரோனா பாதித்த மருத்துவரின் மனைவி
மற்றும் கார் டிரைவர் ஆகியோர்களுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவி
இருப்பதாகவும் அவர்கள் தற்போது நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது
No comments:
Post a Comment