உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், அமெரிக்காவில் பூங்கா ஒன்றில் உள்ள புலி ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தாக்கிய செய்தியை கேள்விப்பட்ட நபர் ஒருவர் தான் வளர்க்கும் ஆட்டு குட்டிகளுக்கு முகத்தில் முகக்கவசம் அணிவித்த சம்பவம் பரபரப்பாக பேசப்படுகிறது.

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ்வர ராவ். 20 ஆடுகளை வளர்ந்துவரும் இவர் தனது ஆடுகளை மேய்ச்சலுக்காக வெளியே அழைத்துச்செல்லும்போது 20 ஆடுகளுக்கும் முகக்கவசம் அணிவித்து அழைத்துச்செல்கிறார்.
இதுபற்றி கூறிய வெங்கடேஷ்வர ராவ், என்னிடம் விவசாய நிலம் ஏதும் கிடையாது. இந்த 20 ஆடுகளை நம்பித்தான் எனது குடும்பம் உள்ளது. கொரோனா குறித்து கேள்விப்பட்டபிறகு நான் வெளியே செல்லும்போதெல்லாம் முகக்கவசம் அணிந்துதான் வெளியே செல்கிறேன்.
அமெரிக்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தாக்கியதாக கேள்விப்பட்டபிறகு எனது ஆடுகளையும் கொரோனா தாக்க கூடும் என்பதற்காக அவற்றுக்கும் தற்போது முகக்கவசம் அணிவித்து அழைத்துசெலவதாக வெங்கடேஷ்வர ராவ் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment