
புதுடில்லி: ஊரடங்கு அமல்ப்படுத்தப்பட்டுள்ளதால் நாட்டில் யாரும்
பசியுடன் இருக்கவில்லை என்பதனை பிரதமர் மோடி உறுதி செய்ய வேண்டும் என காங்.
மூத்த தலைவர் சோனியா கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.கொரோனா தடுப்பு
நடவடிக்கையால் நாடு முழுவதும் ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை
நீட்டிப்பது குறித்து நாளை (ஏப்.14) பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் உரையாட
உள்ளார்.இந்நிலையில், காங். மூத்த தலைவர் சோனியா, பிரதமருக்கு எழுதியுள்ள
கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்,
ஏப்ரல், மே மாதத்துக்கு தலா, 5 கிலோ உணவு பொருட்கள் இலவசமாக
வழங்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன்.ஊரடங்கால் பொருளாதார நெருக்கடி
ஏற்பட்டுள்ளது.
இவற்றை போக்க தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ்
பயனாளிகளுக்கு 10 கிலோ தானியங்கள் வழங்குவதை கூடுதல் 3 மாதங்களுக்கு ( 2020
செப்டம்பர் வரை) நீட்டிக்க வேண்டும். ஊரடங்கால் மிகப் பெரிய
பாதிப்புக்குள்ளான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை
இழந்து தங்கள் சொந்த நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் நடந்தே செல்கின்றனர்.
இவர்களையும், ஏழை எளிய மக்கள் பாதிக்காத வகையிலும் நாட்டில் யாரும்
பசியுடன் இல்லை என்பதனை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த
கடிதத்தில் சோனியா வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment