
அசாம் வெள்ளத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மேலும் 5 பேர் பலியானதையடுத்து, பலி எண்ணிக்கை 102 ஆக உயர்ந்துள்ளது.
அசாம்
மாநிலம் கடந்த சில நாள்களாகவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
பிரம்மபுத்திரா உள்பட முக்கிய நதிகள் இன்னும் அபாயகர கட்டத்துக்கு மேல்
ஓடிக்கொண்டிருக்கின்றன.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை
ஆணையத்தின்படி, மாநிலத்தின் 23 மாவட்டங்களில் 2,265 கிராமங்களில் 24.76
லட்சத்துக்கும் மேற்பட்டோர் இன்னும் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். இதில், 18
மாவட்டங்களில் சுமார் 46,000 பேர் 457 மீட்பு முகாம்களில்
தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பேரிடர்
மீட்புப் படையினர், காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தொடர்ந்து
மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கசிரங்கா தேசியப் பூங்காவில் ஞாயிறு காலை
வரை 129 விலங்குகள் நீரில் மூழ்கியும், வாகனத்தில் அடிபட்டும்
பலியாகியுள்ளன. அருகேவுள்ள தேசிய நெடுஞ்சாலையில் இந்த வாகனத்தில் அடிபடும்
விபத்துகள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment