Latest News

பொருட்காட்சி மையத்தில் 10 ஆயிரம் படுக்கைகள் தயார்

பெங்களூரு:மிகப்பெரிய கொரோனா வைரஸ் சிகிச்சை மையம், பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு, 10 ஆயிரத்து, 100 படுக்கைகள் அமைக்கும் பணி, நிறைவடையும் நிலையில் உள்ளது.கர்நாடகத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெங்களூரில் ஒரு வாரமாக, தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, தினமும், 700 முதல், 1,000 வரையில் அதிகரித்து வருகிறது.இதை கட்டுப்படுத்த, கர்நாடக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநில அரசின் நடவடிக்கையை மத்திய அரசும் பாராட்டியுள்ளது.இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள் பற்றாக்குறை ஏற்படுவதை தடுக்க, துமகூரு சாலையிலுள்ள, நாட்டின் மிகப்பெரிய பெங்களூரு சர்வதேச பொருட்காட்சி மையத்தில், ஐந்து ஹால்களில் தலா, 2 மீட்டர் இடைவெளியில், 5,000 முதல், 7,000 படுக்கைகள் அமைக்க, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.ஆனால், மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறை வந்த பின், அதன் அடிப்படையில், ஐந்து ஹால்களிலும், 10 ஆயிரத்து, 100 படுக்கைகள் அமைக்க முடிவு செய்து, பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.இம்மையத்தில் நோயாளிகளுக்கு நல்ல காற்று வசதி, செவிலியர் அறைகள், சமையல் அறைகள் என அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து ஹாலிலும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கழிப்பறைகள், தனி பிராண வாயு பகுதி அமைக்கப்பட்டுள்ளது.'அட்மிட்' செய்யப்படும் குழந்தைகள், முதியவர்கள் வரை மன உளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க, பெரிய எல்.இ.டி., திரை அமைக்கப்படுகிறது. இது மட்டுமின்றி, 40 படுக்கைகள் கொண்ட ஒவ்வொரு கேபினிலும், ஒரு, 'டிவி' வைக்கப்பட்டிருக்கும்.இந்நிலையில், பொருட்காட்சி மையத்தில் அமைக்கப்பட்டுள்ள, 10 ஆயிரத்து,100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை, முதல்வர் இன்று பார்வையிடுகிறார்.இம்மையத்தில், சிகிச்சைக்கு அவசியமில்லை என்றாலும், நோயாளிகளை கண்காணிக்க, டாக்டர்கள் தேவை. 10 ஆயிரத்து, 100 பேரின் ஆரோக்கியத்தை கண்காணிக்க, 1,000 டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.டில்லியில், டில்லி சர்தார் படேல் கொரோனா சிகிச்சை மையத்தில், 10 ஆயிரம் படுக்கை கொண்ட மையம் அமைக்கப்பட்டது. அதை விட, 100 படுக்கைகள், பெங்களூரில் அதிகமாக ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.