
திருப்பூர்: மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த,
1,300 பேர், திருப்பூரில் இருந்து சிறப்பு ரயில் மூலம், இன்று சொந்த
ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்
வகையில், கடந்த மார்ச் 24ம் தேதி முதல், நாடு முழுவதும் ஊரடங்கு
பிறப்பிக்கப்பட்டது; தற்போது ஜூலை 31ம் தேதி வரை ஊரடங்கு
நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலை வாய்ப்பை இழந்த, புலம் பெயர்ந்த
தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல, அரசிடம் உதவி கோரினர்.
இதையடுத்து திருப்பூரில் தங்கியிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்,
30க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் சொந்த ஊர்களுக்குச்
அனுப்பிவைக்கப்பட்டனர். இந்நிலையில், நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு
உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தங்கியிருந்த, மேற்கு வங்கம்
மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 1,300 தொழிலாளர்கள், இன்று
திருப்பூர் அழைத்து வரப்பட்டனர்.
அவர்களுக்கு உடல் வெப்பநிலை கணக்கிடப்பட்டது. அதன்பின்,
திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட சிறப்பு ரயில் மூலம்,
அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான
உணவு மற்றும் தண்ணீர் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment