Latest News

கரோனா நோயாளிகள் 3 வகை: சிகிச்சை எப்படி இருக்க வேண்டும்?- ஐசிஎம்ஆர், எய்ம்ஸ் விளக்கம்

கோவிட்--19 தொற்றைக் குணப்படுத்த மருந்து இல்லாததால், பொதுவாக அறிகுறியற்ற அடிப்படையில் கோவிட்-19 சிகிச்சை அணுகுமுறை மேற்கொள்ளப்படுகிறது.

உடலில் நல்ல நீரேற்றத்தைப் பராமரிக்க வேண்டியது முக்கியமாகும். அறிகுறியின் தீவிரத் தன்மையைப் பொறுத்து லேசானது, மிதமானது, தீவிரமானது என கோவிட்-19 நோயாளிகள் மூன்று விதமாகப் பிரிக்கப்படுகின்றனர்.

நோய்க்கு மருந்து இல்லாத நிலையில், லேசான, மிதமான, தீவிரமான நோய்த் தொற்றுக்கு, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் விதித்துள்ள சிகிச்சை மேலாண்மை விதிமுறையின்படி, மேற்கொள்ளப்படும் அணுகுமுறையே சிறந்தது என்று, 10.07.2020 அன்று மாநிலங்களுடன் நடைபெற்ற காணொலிக் காட்சியிலும், 'மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் கோவிட் நோய் மேலாண்மை - சிறப்பான மையங்கள்'' என்பது குறித்த மெய்நிகர் கூட்டத்திலும், ஐசிஎம்ஆர் , எய்ம்ஸ் ஆகியவை வலியுறுத்தின. 

மிதமான, தீவிரத் தொற்றுக்கு, விதிமுறைகளின் படி , போதுமான ஆக்சிஜன் ஆதரவு, உரிய நேரத்தில் சரியான முறையில் வழங்கப்படும் எதிர்விளைவு மருந்துகள், பரவலாகக் கிடைக்கக்கூடிய, செலவு குறைவான கோர்ட்டிகோ ஸ்டீராய்டுகள் ஆகியவற்றை கோவிட்-19 தொற்றுக்கான சிகிச்சையாகக் கருதலாம். 

லேசான தொற்றுக்கு, மொத்த பாதிப்பில் சுமார் 80 சதவீதம் ஹைடிராக்சி குளோரோகுயின் பரிந்துரைக்கப்பட்டது. இந்த வகையிலான தரமான சிகிச்சை உத்திகள் நல்ல பலனை அளித்துள்ளன.

கோவிட்-19 தொற்றுக்கு செயல்திறன் மிக்க சிகிச்சைகளை மேற்கொள்ள, சிகிச்சை மேலாண்மை விதிமுறைகளில் குறிப்பிடப்படாத பல்வேறு மருந்துகள் ''கண்டறியும் சிகிச்சைகளாக'' பரிசீலிக்கப்படுகின்றன.

குறிப்பிட்ட வகை நோயாளிகளுக்கு இவற்றைப் பயன்படுத்தலாம். இந்த மருந்துகளை பகிரப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் நோயாளிகளுக்குத் தெரிவித்த பின்னர் வழங்கப்படுகிறது. இந்த மருந்துகள் இன்னும் இந்திய மருந்து தலைமைக் கட்டுப்பாட்டாளரால் அங்கீகரிக்கப்படவில்லை.

அவசர கால கோவிட் நோயாளிகளுக்கு மட்டும் இவை அனுமதிக்கப்படுகின்றன. இத்தகைய மருந்துகளை ஆராயாமல் பயன்படுத்துவது, நல்லதை விட தீமைக்கு வழிவகுக்கக்கூடும் என சிறப்பான செயல்பாட்டுக்குப் பெயர் பெற்ற மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மாநிலங்களுக்கு ஐசிஎம்ஆர் மற்றும் தில்லி எய்ம்ஸ் எச்சரித்துள்ளன.
மிதமான மற்றும் தீவிரத்தன்மை உள்ள நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை பரிந்துரைப்பது, மருத்துவ முன்னேற்றத்தைத் தாமதப்படுத்தக் கூடும் என்பதற்கு ஆதாரம் உள்ளதாக மாநிலங்களுக்கு நினைவுபடுத்தப்படுகிறது. இருப்பினும், இறப்பு விகிதக் குறைப்பு விஷயத்தில் இதனால் பலன் இல்லை.

இவை கல்லீரல், சிறுநீரகங்களில் மோசமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதீத கவனத்துடன் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதேபோல, டொசிலிசுமாப் -க்கான ஆய்வுகளும் இறப்பு விகிதக் குறைப்பில் எந்த பலனையும் அளிக்கவில்லை.

இருப்பினும், தீவிரப் பாதிப்புள்ள நோயாளிகளுக்கு இதைப் பயன்படுத்தும் போது, முறையான தகவல் ஒப்புதல் தேவையாகும். இந்த மருந்தின் பாதிப்பு 'சைக்கோட்டைன் புயல்' எனக் குறிப்பிடப்படுவதால், இதைப் பரவலாக பயன்படுத்துவதை ஊக்குவிக்கக்கூடாது.

'கண்டறியும் சிகிச்சைகள்'' அனைத்தும் , முறையான மருத்துவ வசதி கொண்ட மருத்துவமனைகளில் மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படும் மருத்துவமனைகளில் தான், இதனால் ஏற்படும் சிக்கல்களைச் சமாளிக்க முடியும்.

மருத்துவ சிகிச்சை என்பது ஆக்சிஜன் சிகிச்சையை ( மூக்கு வழியாக பிராணவாயு செலுத்துவது உள்பட) ஸ்டீராய்டுகளை ( விலை குறைவான இவை பரவலாக கிடைக்கின்றன) அளிப்பது ஆகியவற்றைத் தொடர்ந்து மேற்கொள்வது தான் சரி என ஐசிஎம்ஆர் தீவிரமாக வலியுறுத்துகிறது. நோயாளிகள் மற்றும் குடும்பத்தினருக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது, முன்கூட்டியே நோய் மற்றும்

அறிகுறிகளை கண்டறிதல் உள்பட தரமான மருத்துவக் கவனிப்பு , ஆதரவான அணுகுமுறை , சரியான சமயத்தில் போதிய அளவு எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மருந்துகளை அளிப்பது ஆகியவற்றையும் அது பரிந்துரைக்கிறது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.