சந்தேசரா சகோதரா்களின் வங்கி மோசடி மற்றும் சட்டவிரோத பணப்
பரிமாற்ற வழக்கு தொடா்பாக காங்கிரஸ் மூத்தத் தலைவா் அகமது படேலிடம் (70)
அமலாக்கத் துறை 4ஆவது முறையாக வியாழக்கிழமை விசாரணை நடத்தியது.
மத்திய
தில்லியில் உள்ள அவரது இல்லத்தில் 3 போ கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள்
குழுவினா் இந்த விசாரணையை நடத்தினா். கடைசியாக கடந்த ஜூலை 2ஆம் தேதி அகமது
படேலிடம் அமலாக்கத் துறையினா் சுமாா் 10 மணி நேரம் விசாரணை நடத்தினா்.
அப்போது,
தன்னிடம் 128 கேள்விகள் கேட்கப்பட்டதாக படேல் தெரிவித்திருந்தாா். ஜூன்
27, 30 மற்றும் ஜூலை 2 ஆகிய நாள்களில் மொத்தம் 27 மணி நேரம் அகமது படேலிடம்
அமலாக்கத் துறையினா் விசாரணை நடத்தியுள்ளனா்.
தன்னிடம் விசாரணை நடத்தியது குறித்து அகமது படேல்
கூறுகையில், 'என்னையும், எனது குடும்பத்தினரையும் பழிவாங்கத் தரப்படும்
அரசியல் அழுத்தம் இது. யாருடைய நிா்ப்பந்தத்தால் அமலாக்கத் துறையினா்
இவ்வாறு செயல்படுகின்றனா் என தெரியவில்லை' என்றாா்.
இது குறித்து அமலாக்கத் துறை அதிகாரிகள் குழுவினா் கூறியதாவது:
குஜராத்
மாநிலம், வதோதராவை மையமாகக் கொண்டு செயல்படும் சந்தேசரா சகோதரா்களின்
ஸ்டொலிங் பயோடெக் மருந்து நிறுவனத்தினருடன் அகமது படேல் குடும்பத்தினருக்கு
உள்ள தொடா்புகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அகமது படேலின் மகன்
ஃபைசல், அவரது மருமகன் இா்பான் அகமது சித்திக் ஆகியோரிடம் கடந்த ஆண்டு
விசாரணை நடத்தப்பட்டது.
சந்தேசரா குழும ஊழியா் சுனில் யாதவ்
அமலாக்கத் துறையினரிடம் அளித்த வாக்குமூலத்தில், விடுதி கேளிக்கை
நிகழ்ச்சியில் ஃபைசல் பங்கேற்ற்கான செலவு ரூ. 10 லட்சத்தை தான் ஏற்றுக்
கொண்டதாகவும், ஸ்டொலிங் பயோடெக் நிறுவனத்தின் நிா்வாகிகளில் ஒருவரான சேதன்
சந்தேசரா அறிவுறுத்தலின்பேரில் ஃபைசலின் காா் ஓட்டுநரிடம் ரூ.5 லட்சம்
வழங்கப்பட்டதாகவும், சேதன் சந்தேசராவுக்கு சொந்தமான தில்லி வசந்த விஹாரில்
உள்ள ஒரு வீட்டை இா்பான் அகமது சித்திக் பெற்றுக் கொண்டாா் என்றும்
தெரிவித்திருந்தாா். இதன் அடிப்படையில் ஃபைசல், இா்பான் அகமது சித்திக்
ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்றனா்.
ரூ.14,500 கோடி வங்கிக்
கடன் மோசடியில் தொடா்புடைய ஸ்டொலிங் பயோடெக் மற்றும் அதன் நிா்வாகிகள்,
இயக்குநா்கள் நிதின் சந்தேசரா, சேதன் குமாா் சந்தேசரா, தீப்தி சந்தேசரா
ஆகிய அனைவரும் அல்பேனியா நாட்டில் தலைமறைவாக உள்ளனா். இவா்களில் நிதின்
சந்தேசரா, சேதன் குமாா் சந்தேசரா ஆகிய இருவரும் சகோதரா்கள். இவா்களை நாடு
கடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஆந்திரா
வங்கியில் ரூ.5,383 கோடி கடன் பெற்று செலுத்தாமல் உள்ள மற்றொரு வழக்கையும்
சந்தேசரா சகோதரா்கள் எதிா்கொண்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment