
அதிமுக, திமுக எம்பிக்கள் உள்பட நாடு முழுவதும் உள்ள 61 மாநிலங்களவை எம்பிக்கள் வரும் 22ம் தேதி பதவியேற்க உள்ளனர்.
கடந்த
ஜுன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் 6 எம்பிக்களும்,
ஆந்திரா மற்றும் குஜராத்தில் தலா 4 எம்பிக்களும், ஜார்க்கண்டில் 2
எம்பிக்களும், மத்திய பிரதேசத்தில் 3 எம்பிக்களும், மணிப்பூர், மேகலாயா
ஆகிய மாநிலங்களில் தலா ஒரு எம்பிக்களும் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு
செய்யப்பட்ட எம்பிக்கள் அனைவரும் கொரோனா வைரஸ் காரணமாக பதவியேற்பதில்
சிக்கல் ஏற்பட்டது.
இந்த நிலையில்,
மொத்தம் 61 எம்பிக்கள் வரும் 22ம் தேதி ஹவுஸ் ஆப் சேம்பரில் நடக்கும்
நிகழ்ச்சியில் பதவியேற்க உள்ளனர்.
வழக்கமாக அவையிலோ அல்லது ராஜ்யசபா தலைவர் அறையிலோ
உறுப்பினர்கள் பதவியேற்று வந்த நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கையாக இந்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் தேர்வான
மு.தம்பிதுரை, கே.பி.முனுசாமி, ஜி.கே.வாசனும், திமுக சார்பில் திருச்சி
சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ் ஆகியோரும் பதவியேற்க உள்ளனர்.
No comments:
Post a Comment