Latest News

மூன்று மரண அறிவிப்கள் ~ என்.செய்யது புஹாரி (வயது 61)


 மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் பிஎம்கே நெய்னா முகமது அவர்களின் மகனும், பெரிய மின்னார் வீட்டைச்சேர்ந்த மர்ஹூம் ஏ முகமது ஆலம் அவர்களின் மருமகனும், என்.நாகூர் கனி, என்.அகமது ஜலாலுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் நிஜாமுதீன், எம்.தமீம் அன்சாரி ஆகியோரின் மாமனாரும், பி.பாவா பகுருதீன், அகமது ரபீக், எஸ்.இப்ராஹிம்ஷா ஆகியோரின் சகலையும், மர்ஹூம் அஜ்மீர் என்கிற அப்துல் கரீம், ஹாஜா முகைதீன் ஆகியோரின் மச்சானும், முகமது இர்ஃபான் அவர்களின் தகப்பனாருமாகிய என்.செய்யது புஹாரி (வயது 61) அவர்கள் நேற்று இரவு மேலத்தெரு சானாவயல் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) காலை 9 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
 
 
 
 
மரண அறிவிப்பு ~ ஹாஜிமா முகமது மரியம் (வயது 70) 
 
 
நடுத்தெரு கீழ்புறம் மர்ஹூம் முகமது ராவூத்தர் அவர்களின் மகளும், மர்ஹூம் ஹபீப் முகமது அவர்களின் மருமகளும், மர்ஹூம் சாகுல் ஹமீது அவர்களின் மனைவியும், அப்துல் ராஜிக், அகமது ஜவாஹிர், அகமது ஷாஜித் ஆகியோரின் தாயாரும், தமீம் அவர்களின் மாமியாருமாகிய ஹாஜிமா முகம்மது மரியம் (வயது 70) அவர்கள் இன்று காலை 7 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) காலை 10 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
 
 
 
மரண அறிவிப்பு ~ சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68) 
 
 

கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.க.மு அபுல் ஹசன்  அவர்களின் மகனும், மர்ஹூம் க.செ.மு கான் சாஹிப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் சி.க.மு சேக் நசுருதீன், மர்ஹூம் சி.க.மு சம்சுதீன் ஆகியோரின் சகோதரரும், எம்.எஸ் முகமது இக்பால் அவர்களின் சகலையும், எஸ். அயூப்கான் அவர்களின் தாய் மாமாவும், என்.பரகத் அலி அவர்களின் மாமனாரும், எம். அப்துல் ஹக்கீம் அவர்களின் தகப்பனாருமாகிய சி.க.மு முகமது மொய்தீன் (வயது 68) அவர்கள் இன்று மாலை மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-07-2020) இரவு 8 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
 
 
 
அதிரை நியூஸ்

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.