Latest News

ராஜஸ்தான் காங்., தலைவர்கள் வீடுகளில் ஐடி ரெய்டு

ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில அரசியலில் நெருக்கடி நிலை ஏற்பட்டிருக்கும் நிலையில், மாநில காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகள் உட்பட பல இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்றது.ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் - துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அம்மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. தனக்கு 30 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளதாகவும், மாநில அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாக சச்சின் பைலட் அறிவித்தது மாநில அரசுக்கு சிக்கல் ஏற்படுத்தியது. தொடர்ந்து, பா.ஜ.,வில் இணைய போவதாக வெளியான தகவலை சச்சின் பைலட் மறுத்துள்ளார்.இந்நிலையில், ராஸ்தானில், முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், முதல்வர் அசோக் கெலாட்டிற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன், ஆட்சியை கவிழ்க்க நினைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொண்ட 102 பேரும் ரிசார்ட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இந்த பரபரப்பான அரசியல் சூழலில், ராஜஸ்தானில் உள்ள காங்., தலைவர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நடைபெற்றது. காங்கிரஸ் துணை தலைவர் தர்மேந்திர ரத்தோர், ராஜீவ் அரோரா ஆகியோரின் வீடுகளில் ரெய்டு நடைபெற்றது. மேலும், அரோராவின் அலுவலகம், நண்பர்கள் வீடுகள், காங்., கட்சியினருக்கு நெருக்கமாக இருக்கும் நபர்களின் வீடுகள், அலுவலகங்களிலும் சோதனை நடந்தது. டில்லி, மஹா, மும்பையில் சில இடங்களிலும் சோதனை நடந்தது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.