Latest News

தாராபுரம் அருகே வந்தது மர்ம விலங்கு?.. அடுத்து நடந்தது என்ன?.. மக்கள் மத்தியில் அச்சம்..

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள தொப்பம்பட்டி கிராம பகுதியில் உள்ள பொம்பநாயக்கன் தோட்டத்தைச் சேர்ந்தவர் பூவேந்திரன். இவர் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். இவர் சுமார் 20 ஆடுகள் வரை தனது வாழ்வாதரத்தினை போக்குவதற்காக வளர்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் தினசரி காலையில் மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்று மாலையில் தினமும் வீடு திரும்புவது வழக்கமாக கொண்டிருந்தார். அந்த ஆடுகளை பட்டியில் வைத்து அடைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு திடீரென பட்டியில் இருந்த ஆடுகள் சத்தம் அதிக அளவில் போட்டது. அந்த சத்தத்தை கேட்டு எழுந்து வந்த பூவேந்திரன் ஆடுகளின் நடுவிலிருந்து மர்ம விலங்கு ஒன்று ஓடுவதை கண்டறிந்துள்ளார். இருட்டாக இருந்ததால் சரியாக அவரால் உணர முடியவில்லை மேலும் அங்கு சென்று பார்த்தபோது 10 ஆடுகள் வரை பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இந்த சம்பவத்தை பார்த்த உடன் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தகவல் அறிந்த காவல்துறையினர் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நேரடியாக சென்று அப்பகுதியில் விசாரணை நடத்தினார்கள். மேலும் திடீரென 10 ஆடுகள் வரை ஒரே நாளில் இறந்ததற்கான காரணங்களையும், அந்த மர்ம விலங்கு என்ன என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.