
தமிழக மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன் கூட்டுறவு
சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர்
சண்முகம் அறிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் நிறுத்தம்
என உத்தரவு வெளியானதாக கூறப்பட்ட நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர்
மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு
வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விதமான
கடன்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
இதனால்
வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்படுவதில்லை என விவசாயிகளும், பொதுமக்களும்
புகார் கூறினர். கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை நிறுத்துமாறு எந்த
சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என கூறி தமிழக அரசு இந்த விவாகரத்திற்கு
முற்றுப்புள்ளி வைத்தது கவனிக்கத்தக்கது.
Newstm.in
No comments:
Post a Comment