
பணமோசடி வழக்கில் தப்பியோடி லண்டனில் உள்ள தொழிலதிபர்
விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான காலக்கெடுவை இங்கிலாந்து
வழங்க முடியாது எனவும் இதனை நீதிமன்றமே முடிவெடுக்கும் என அந்நாட்டு தூதர்
பிலிப் பார்டன் தெரிவித்துள்ளார்.
இந்திய
வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திரும்ப செலுத்த முடியாமல்
தப்பிச்சென்ற பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் வாழ்ந்து வருகிறார்.
லண்டனில் இவருக்கு எதிராக நாடு கடத்தல் வழக்கு விசாரணை செய்யப்பட்டு
வந்தது. இதனை அடுத்து தன்னை நாடு கடத்துவதற்கு எதிராக லண்டனில் உள்ள உயர்
நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மல்லையா தாக்கல் செய்த
மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தோல்வியடைந்ததை தொடர்ந்து.
இதனால் விஜய் மல்லையா இந்தியா கொண்டுவரப்படுவார்
என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இதற்கான வேலைகளிலும் சிபிஐ மற்றும்
அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.
ஆனால்
பிரிட்டனின் முக்கியமான ரகசிய சட்டம் ஒன்றின் காரணமாக மல்லையாவை நாடு கடத்த
முடியாதநிலை ஏற்பட்டது. ஆனால் இந்த சட்டம் குறித்த முழு விவரங்களை இன்னும்
அந்நாட்டு வெளியுறவுத்துறை வெளியிடவில்லை.
இதனை தொடர்ந்து பிரிட்டனில் தஞ்சம் கோரியும் தன்னை நாடு கடத்த தடை விதிக்கக்கோரியும் பிரிட்டன் அரசிடம் மல்லையா கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த மத்திய அரசு விஜய் மல்லையாவின் கோரிக்கையை ஏற்க கூடாது என அந்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் விஜய் மல்லையாவை
இந்தியாவுக்கு நாடுகடத்துவதற்கான காலக்கெடுவை தாங்கள் வழங்க முடியாது என
இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பேசிய இங்கிலாந்து
தூதர் பிலிப் பார்டன், விஜய் மல்லையா புகழிடம் கோரிய வழக்கு தொடர்பாக
இங்கிலாந்து அரசாங்கம் ஒருபோதும் கருத்து தெரிவிக்கவில்லை எனவும்
இங்கிலாந்து அரசாங்கமும் நீதிமன்றமும் தனித்தனியே சுதந்திரமான அமைப்பாக
உள்ளதாக தெரிவித்தார். மேலும் தேசிய எல்லைகளை கடப்பதன் மூலம் குற்றவாளிகள்
நீதியிலிருந்து தப்ப முடியாது என்பதை உறுதிப்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து
செயல்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.
மல்லையாவின் ஒப்படைப்பு
பிப்ரவரியில் உத்தரவிடப்பட்டது, ஆனால் "ஒரு சட்ட வழக்கு நீதிமன்றத்தில்
நடந்து கொண்டிருக்கிறது, அது குறித்து மேலும் கருத்து தெரிவிக்க முடியாது,
அவரை நாடு கடத்துவதற்கான காலக்கெடு குறித்தும் என்னால் எதுவும் கூற
முடியாது. இருப்பினும் இந்த வழக்கின் முக்கியத்துவத்தை இங்கிலாந்து அரசு
புரிந்துகொள்கிறது என அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment