Latest News

தமிழகத்தில் மேலும் புதிய மாவட்டம் உதயமா ? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் !!

இன்று ஈரோட்டில் ரூ.53.71 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் பழனிசாமி. ரூ.97.85 கோடி மதிப்பிலான 15-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைத்தொடர்ந்து, அங்கு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ;

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு பவானியாற்றில் 7 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். கோபிச்செட்டிபாளையத்தில் புறவழிச்சாலை அமைக்கப்படவுள்ளது என தெரிவித்தார்.

அப்போது , எடப்பாடி பகுதியை மாவட்டமாக்கும் திட்டம் உள்ளதா ? என்ற கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் தமிழகத்தில் இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது என திட்டவட்டமாக கூறினார். 

தமிழகத்தில், கடந்த 2009-ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு கடந்த ஆண்டு தான் தமிழகத்தில் கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி , திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களாக உருவாக்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து புதியதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்பட்டது.இதனால், தமிழகத்தில் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை 38 உயர்ந்தது என்பது குறிப்பித்ததக்கது.
Newstm.in

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.