Latest News

தமிழக மாணவர்களுக்காக பாடங்கள் குறைப்பு?... வெளியான தகவல்.!!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால், தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் என்பது பெரிய கேள்விக்குறியாக அமைந்துள்ளது. பொதுஇடங்களில் மக்கள் அதிகளவு கூடினால், இப்போதுள்ள சூழ்நிலையில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்படும் என்ற அச்சத்தால், பல கட்டுப்பாடுகளுடன் கொண்ட தளர்வுகள் இந்தியா முழுவதும் அமலாகியுள்ளது. 

பள்ளிகள் இந்நேரம் திறக்கப்பட்டு இருந்தால் மாணவர்களுக்கு பயிற்சிகள், தேர்வுகள் என பரபரப்பாக இருக்கும் பள்ளி மற்றும் கல்லூரி வளாகங்கள் ஆசிரியர்களின் வருகை கூட இல்லாமல் காத்து வாங்கிக்கொண்டு இருக்கிறது. மேலும், இதற்கு மேல் வரும் மாதத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், முழு பாடங்களையும் நடத்துவது சாத்தியமில்லாதது மற்றும் ஆசியருக்கும், மாணவர்களுக்கும் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும் என்ற வாதங்கள் எழுந்தது.
இதனை கருத்தில் கொண்டு அரசுகள் பாடத்திட்டங்களை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது. இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு சி.பி.எஸ்.இ மாணவர்களின் பாடங்களில் 30 விழுக்காடு குறைத்து அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்திலும் 30 விழுக்காடு பாடங்கள் குறைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பாடங்கள் 30 விழுக்காடு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் முதல்வரிடம் இதற்கான அறிக்கை தாக்கல் ஆகிறது என்றும், மத்திய அரசின் முடிவை பின்பற்றி தமிழக அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.