
கேரள மாநிலத்தை சார்ந்த ஸ்வப்னா சுரேஷ் தங்க நகைக்கடத்தல் வழக்கில்
சுங்க அதிகாரிகளால் முதலில் கைது செய்யப்பட்டார். இவர் அங்குள்ள அரசு
தொழில்நுட்ப பிரிவு ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்ததை அடுத்து, விசாரணை
சூடுபிடித்தது.
இதன்பின்னர், பல போராட்டங்கள் நடத்தப்பட்டு இந்த
வழக்கு தொடர்பான விசாரணை என்.ஐ.ஏ அதிகாரிகள் கைக்கு சென்றது. இந்த வழக்கில்
தொடர்புடைய பல அரசு அதிகாரிகளும் என்.ஐ.ஏ அதிகாரிகளின் விசாரணை வட்டத்தில்
இருக்கின்றனர்.

இந்த நிலையில், இது தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்தியுள்ள அதிகாரிகள் தங்கம் எப்படி கடத்தி வரப்பட்டது?
கடத்தி வரப்பட்ட தங்கம் விற்பனை செய்வது எப்படி? என்பது தொடர்பாக விசாரணை செய்ய துவங்கியுள்ளனர்.
இந்த
விசாரணையில், அதிர்ச்சி தகவலாக கடத்தல் தங்கங்கள் தமிழகத்தின்
திருச்சியில் உள்ள பிரபல நகைக்கடைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றும்,
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தங்க, வைர வியாபாரிகளிடமும் விற்பனை
செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல்
வெளியாகியுள்ளது. இன்னும் சில நாட்களில் தமிழகத்திலும் பல நகைக்கடைகள் இந்த
விஷயத்தில் சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment