Latest News

ராகுல் மீண்டும் தலைவராக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

புதுடில்லி: காங். தலைவராக மீண்டும் ராகுலை நியமிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளனர்.காங். மூத்த தலைவர் சோனியா இன்று (ஜூலை 11) காங். லோக்சபா எம்.பி.க்களுடன் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக ஆலோசன நடத்தினார்.அப்போது நாட்டில் பரவியுள்ள கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள தற்போதைய அரசியல், பொருளாதார நிலவரம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் ஆலோசனை நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளாவைச் சேர்ந்த கொடிகுனில் சுரேஷ், தமிழகத்தின் மாணிக்கம் தாகூர், அசாமின் கவுரவ் கொகெய், அப்துல் காலிகியூ ,பீஹாரின் முகம்மது ஜாவத், ஒடிசாவின் சப்தகிரி சங்கர் உள்ளிட்ட லோக்சபா எம்.பி.க்கள் பலர் தற்போதைய அரசியல் சூழ்நிலையில் ராகுலை மீண்டும் கட்சியின் தலைவராக நியமிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.முன்னதாக கடந்த மாதம் காங். காரிய கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் , ராகுலை மீண்டும் தலைவராக்குங்கள் என மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ம..பி.யை காங். மூத்த தலைவர் திக்விஜய் சிங் டுவிட்டர் மூலம் ராகுலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.