புதுடில்லி: பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தில் என் மீது அடிப்படை
ஆதாரமற்ற குற்றச்சாட்டை காங். சுமத்தியது. நான் நிரபராதி என முன்னாள்
கவர்னரும் உ.பி. முன்னாள் முதல்வருமான கல்யாண்சிங் தெரிவித்துள்ளார்.உத்தர
பிரதேச முதல்வராக கல்யாண் சிங், 88. ஆட்சியின் போது 1992-ம் ஆண்டு
டிசம்பரில் அயோத்தியில், பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இது தொடர்பாக,
கல்யாண்சிங் மற்றும் பா.ஜ., மூத்த தலைவர்களான, அத்வானி, முரளி மனோகர் ஜோஷி,
உமா பாரதி உள்ளிட்டோர் மீதும் சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தது. 32 பேர்
குற்றவாளிகளாக சி.பி.ஐ. சேர்த்துள்ளது.வழக்கு சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில்
நடந்து வருகிறது. இந் நிலையில், ராஜஸ்தான் மாநில கவர்னராக நியமிக்கப்பட்ட
கல்யாண் சிங் கடந்தாண்டு பணி நிறைவடைந்தவுடன் ,பா.ஜ.,வில் இணைந்தார்.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் ஏற்கனவே
கல்யாண்சிங்கிற்கு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் இன்று
சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் ஆஜரானார்.
அவரிடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.பின்னர் கல்யாண்சிங் கூறியது, பாபர் மசூதி இடிப்பு சம்பவம் நடந்த போது உபி. மாநில முதல்வர் என்ற முறையில், சர்ச்சை இடத்திற்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போட உத்தரவிட்டேன். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மத்தியில் அப்போது ஆட்சி அதிகாரத்தில் இருந்த காங். என் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை சுமத்தி பெய்யாக எனது பெயரை வழக்கில் சேர்த்துள்ளது. நான் நிரபராதி. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment