
மும்பை, சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களை ஒப்பிடுகையில்,
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு மோசமாக இல்லை என கர்நாடக துணை முதல்வர்
அஸ்வத் நாராயண் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம்
பெங்களூருவில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
திடீரென உயர்ந்த தொற்று பரவலால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும்
அங்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடும்
போது குறைவாகவே உள்ளது. அதனால் மக்கள் அச்சத்தில் நகரை விட்டு
வெளியேறுகின்றனர். ஆனால் மக்கள் பெங்களூருவை விட்டு வெளியேற வேண்டாம் என
அரசு அறிவுறுத்தி வருகிறது.
இந்நிலையில்
மும்பை, சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களுடன் ஒப்பிடும் போது பெங்களூருவில்
நிலைமை மோசமாக இல்லை என கர்நாடக துணை முதல்வர் அஸ்வத் நாராயண்
தெரிவித்துள்ளார்.
கடந்த ஓரிரு நாட்களில் கொரோனா பாதிப்பு திடீரென
உயர்ந்ததால் சில குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது நிலைமை
கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா
பரவலைக் கட்டுப்படுத்த அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், உரிய
சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும்
கூறுகையில், 'கொரோனா பாதிப்பு அக்டோபர் மாதத்தில் உச்சத்தை அடையும் என
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. நெருக்கடியை
சமாளிக்க அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மக்கள் யாரும்
அச்சம் கொள்ளத் தேவையில்லை. கொரோனா பரவலை தடுக்க மக்கள் அரசுக்கு
ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். தொற்று சமூகப் பரவல் நிலையை அடையாமல் தடுக்க
அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது'என்றார்.
No comments:
Post a Comment