Latest News

நான் ட்ரம்ப் அல்ல, மக்கள் கஷ்டப்படுவதை என்னால் பார்க்க முடியாது" - உத்தவ் தாக்கரே!

கொரோனாவால் மக்கள் பாதிக்கப்படுவதை கண்டு கொள்ளாமல் இருக்க நான் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அல்ல என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே விமர்சித்துள்ளார்.
 
சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவை, அவரது கட்சியின் முக்கிய நிர்வாகியும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத் பேட்டி எடுத்துள்ளார். இந்த பேட்டியின் முன்னோட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், கொரோனா தொற்று குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "நான் ட்ரம்ப் அல்ல என்றும் எனது மக்கள் என் கண் முன்னால் கஷ்டப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது" என்றும் தாக்கரே கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது. அமெரிக்காவில் கொரோனா பரவல் மற்றும் அதிகரிக்கும் உயிரிழப்புகளுக்கு ட்ரம்பின் மோசமான நிர்வாகத் திறனே காரணம் என்று அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதனை கருத்தில் கொண்டே உத்தவ் தாக்கரே இவ்வாறு கூறியுள்ளார். 

ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அவர், தளர்வுகளை அறிவிப்பதிலும் எச்சரிக்கையாக இருப்பதாக பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். அதிக கட்டுப்பாடுகளால் மக்கள் சோர்வடைந்து வருவதாகத் தெரிவித்துள்ளார். மேலும் ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளதாகவும், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள இந்த காலகட்டத்தில் கல்லூரித் தேர்வுகளை நடத்த விரும்பினாலும், அதனை ஏன் நடத்த முடியாது என்பது குறித்தும் பேட்டியில் முதல்வர் உத்தவ் தாக்கரே பேசியுள்ளார். 

முன்னதாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை, சஞ்சய் ராவத் பேட்டி எடுத்திருந்தார். ஊரடங்கின் போது சரியான நேரத்தில் எச்சரிக்கையுடன் தளர்வுகள் அறிவித்த முதல்வர் உத்தவ் தாக்கரேவை அவர் பாராட்டியிருந்தார். தனக்கும் உத்தவ் தாக்கரேவுக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை எனவும் சரத் பவார் விளக்கமளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.