Latest News

வானில் ஓர் அதிசயம்!

அரிய வானியல் நிகழ்வு தான் வால் நச்சத்திரம். 'நியோவைஸ்' என்ற வால் நட்சத்திரம் இந்தியாவில் 20 நாட்கள்(ஜூலை 14- ஆக2) தெரியும்வால்நட்சத்திரம் என்பது விண்வெளியில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றிவரும் தூசி, கற்கள், வாயுக்கள், பனிக்கட்டிகளால் ஆன கலவை. 'காமெட்டா' என்ற வார்த்தைக்கு லத்தீன் மொழியில் 'நீண்ட முடி' என்று பெயர். இதில் உள்ள நீண்ட வால் தலைமுடி போல இருப்பதால் 'காமெட்' என பெயரிட்டனர். இது சூரியனுக்கு அருகில் வரும்போது, சூரிய ஒளியால் பிரகாசமான வால் போல மாறுகிறது. இதன் அகலம் அதிகபட்சம் 20 கி.மீ., இருக்கும்.எத்தனை வகை பல வகை வால் நட்சத்திரங்கள் உள்ளன. 2650 வால் நட்சத்திரங்களை கண்டறிந்துள்ளனர். சில ஆண்டுக்கு ஒரு முறை சில 20 - 200 ஆண்டுகளுக்கு ஒரு முறை, சில 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை , சில வாழ்நாளில் ஒரு முறை மட்டும் சூரியனை சுற்றி விட்டு செல்லும்.இதனால், பூமிக்கு எவ்வித பாதிப்பும் இல்லைமுதல் கண்டுபிடிப்பு உலகில் வால் நட்சத்திரத்தை முதலில்(1680 ல்) தொலைநோக்கி மூலம் பார்த்தவர் ஜெர்மனியின் காட்பிரைட் கிர்ச். முதலில(1786) கண்டறிந்த பெண் விஞ்ஞானி ஜெர்மனியின் கரோலின் ஹெர்ச்சல். பின் முதலில் புகைப்படம் எடுத்தவர் அமெரிக்காவின் எட்வர்ட் எமர்சன் பெர்னார்ட்'நியோவைஸ் ' எப்படி நாசா 2010 ல் செலுத்திய 'நியோவைஸ்'விண்வெளி தொலைநோக்கி, பல்வேறு எரிகற்கள் மற்றும் வால் நட்சத்திரத்தை கண்டறிந்தது. அவ்வாறு ஆய்வின் போது பூமியின் சுற்றுப்பாதைக்கு அருகே 2020 மார்ச் 27 ல் வால் நட்சத்திரம் ஒன்றை கண்டுபிடித்தது.

அதற்கு, 'நியோவைஸ்' பெயர் சூட்டப்பட்டது. இதற்கு மற்றொரு பெயிர்'c/2020 F3'. ஜூலை 6ல் சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து விண்வெளி வீரர் பாப் பெஹ்ன்கென் இதனை படம்பிடித்து 'டுவிட்டரில்' வெளியிட்டார்.எங்கு: வானில் வடக்கு மேற்காக தெரியும்எப்படி பார்ப்பது: வெறும் கண்கறால் பார்க்கலாம். பைனாகுலர் மூலம் தெளிவாக பார்க்கலாம்எப்போது: 20நாட்களுக்கு சூரிய மறைவுக்குப்பின வடமேற்க்காக வானில் 20 நிமிடங்கள் தெரியும். மிக நெருக்கமாக ஜூலை 22ம் தேதி பூமியில் இருந்து 10.3 கோடி கி.மீ., தூரத்தில் வரும்.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.