
ராய்காட்: மஹாராஷ்டிராவின், ராய்காட் மாவட்டத்தில், நான்கு தளங்களை உடைய
அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து தரைமட்டமான விபத்தில் பலி எண்ணிக்கை
12ஆக உயர்ந்துள்ளது.மஹாராஷ்டிராவில், இங்கு, ராய்காட் மாவட்டத்தின், மஹத்
என்ற இடத்தில், நான்கு தளங்களை உடைய, அடுக்குமாடி குடியிருப்பு, நேற்று
மாலை, 6:50 மணிக்கு, பயங்கர சத்தத்துடன் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது.
இந்த குடியிருப்பில், 45 வீடுகள் உள்ளதாக கூறப்படுகிறது. 'இந்த
சம்பவத்தில், 15 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். 70க்கும்
மேற்பட்டோர், இடிபாடுகளில் சிக்கியிருந்தனர்.தேசிய பேரிடர் மீட்பு படையை
சேர்ந்த மூன்று குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுவரை 12 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சமும்,
காயமடைந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரமும் நிதி உதவி அளிக்கப்படும்
என மாநில அரசு அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment