
ஆப்கானிஸ்தான் நாட்டில் பெய்துவரும் வரலாறு காணாத கனமழை, வெள்ளத்தில் சிக்கி 122 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தெற்காசிய நாடுகளில் ஒன்றான ஆப்கானிஸ்தானில் கொரோனாவுக்கு மத்தியில் பருவமழையும் தீவிரமடைந்து வருகிறது. அங்குள்ள பர்வான், காபூல், கபீசா, மைதானன் வர்தக், பஞ்ச்ஷீர், நங்கர்ஹார், லோகர், பக்தியா, பக்திகா, நூரிஸ்தான், லக்மான் மற்றும் கோஸ்ட் ஆகிய மாகாணங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் 12 மாகாணங்களில் உள்ள பல நகரங்களில் வெள்ளம் சூழந்துள்ளன. இதனை அடுத்து அங்கு சென்றுள்ள மீட்புப்படையினர் வெள்ளத்தில் சிக்கியவரகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளம் சேறும் சகதியுமான நீரை கொண்டுவந்ததால் வீடுகள் இடிந்து சேதமடைந்ததோடு பலர் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை இங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 150க்கும் அதிகமானவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தேவையான மீட்பு மற்றும் உதவி நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அதிபர் அஸ்ரப் கான் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment