
புதுடில்லி: 13 நாடுகளுக்கு சர்வதேச விமான போக்குவரத்தை விரிவுபடுத்து
குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி
தெரிவித்தார்.உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில்
கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாட்டு விமான போக்குவரத்து மட்டுமின்றி
சர்வதேச விமான போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.எனினும் வந்தே பாரத்
திட்டத்தின் கீழ் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐக்கிய அரபு
அமீரகம், கத்தார், மாலத்தீவு ஆகிய நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை
அழைத்து வர விமான சேவை நடந்துவருகிறது.இது தொடர்பாக மத்திய உள்நாட்டு விமான
போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியது, சர்வதேச விமான
போக்குவரத்தை விரிவுபடுத்த ஆஸ்திரேலியா, இத்தாலி, நியூசிலாந்து, நைஜீரியா,
பஹ்ரைன், இஸ்ரேல், கென்யா, பிலிப்பைன்ஸ், ரஷியா, சிங்கப்பூர், தென்கொரியா,
தாய்லாந்து உள்ளிட்ட 13 நாடுகளுக்கும் விமான போக்குவரத்தை தொடங்க
பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கான ஒப்பந்தம் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றார்.
No comments:
Post a Comment