
கேரள மாநிலம் கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிரங்கும் ஓடு பாதையை விட்டு விலகி ஏர் இந்திய விமானம் விபத்துகுள்ளாகியது. விமானம் இரண்டு துண்டுகளான உடைந்து நொறுங்கியது.
துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா விமானம் கோழிக்கோடு சர்வதேச விமான நிலைய ஓடு தளத்தில் தரையிரங்கும் போது, பாதையில் இருந்து விலகி விபத்துகுள்ளாகி இருக்கிறது. கனமழை பெய்ததால் ஓடுபதையில் இருந்து விமானம் சறுக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. விபத்துகுள்ளான விமானத்தில் 180 பயணிகள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக துபாயில் சிக்கித்தவித்தவர்கள் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்த விமானத்தில் நாடு திரும்பியுள்ளனர். இவ்விமானத்தில் 174 பயணிகளும், 6 சிப்பந்திகளும் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.
இரண்டு விமானிகள் உயிரிழப்பு:
இந்த கோர விபத்தில் விமானிகள் இருவர் உள்ளிட்ட 3 பேர் உயிரிழந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. விபத்தில் படுகாயமடைந்த 37 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என கூறப்படுகிறது. தீயணைப்பு படையினர் உள்ளிட்ட மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உதவி எண்கள் அறிவிப்பு:
கோழிக்கோடு விமான விபத்து தொடர்பாக உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 056 546 3903, 05430 90572, 0543090575 மற்றும் 0543090572 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் நேற்றிரவு இடுக்கி மாவட்டம் ராஜமலை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 15க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில் மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில் தற்போது இந்த விமான விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment