Latest News

தெலங்கானா ஸ்ரீசைலம் அணை நீர்மின் நிலைய தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு!

 

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணை நீர்மின் நிலையத்தில் 4 ஆவது அலகு முனையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம் அணையின் நிர்மின் நிலையத்தில் 4 ஆவது அலகு முனையத்தில் நேற்று இரவு 19 பேர் பணியாற்றி வந்தனர். இதனிடையே இரவு 10.30 அளவில் அங்கு திடீரென தீவிபத்து ஏற்பட்டு அப்பகுதி முழுவதும் புகை சூழ்ந்துள்ளது. இதில் முனையத்தில் சிக்கியிருந்த 19 பேரில் 10 பேர் பத்திரமாக வெளியேறினர். இருப்பினும் கடுமையான தீ காரணமாக மீதமுள்ள 9 பேரால் வெளியேற முடியவில்லை. இந்த சம்பவம் குறித்து அங்கு சென்ற தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அங்கு வந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் முனையத்தில் சிக்கியுள்ள 9 பேரையும் மீட்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

 

இந்நிலையில் நீர்மின் நிலைய தீவிபத்தில் சிக்கிய 9 பேரில் 6 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். இதனிடையே மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெறுவதை அரசு உறுதி செய்துள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.