Latest News

BeirutBlast : `5 இந்தியர்கள் பாதிப்பு; 16 பேர் கைது!’ - லெபனானில் தீவிரமாகும் விசாரணை


லெபனான் பெயரூட் துறைமுக விபத்து
லெபனான் பெயரூட் துறைமுக விபத்து

``லெபனானில் நடந்த வெடிவிபத்தில் இங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன”

லெபனானின் தலைநகரான பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி மிகவும் பயங்கரமான வெடிவிபத்து நிகழ்ந்தது. இந்த விபத்துக்கு துறைமுகத்தில் உள்ள சேமிப்புக் கிடங்கில் சுமார் ஆறு ஆண்டுகளாக எந்த வித பாதுகாப்பு நடடைமுறைகளையும் பின்பற்றாமல் சேமித்து வைக்கப்பட்டிருந்த 2,750 டன் அமோனியம் நைட்ரேட் எனும் வேதிப்பொருள் வெடித்ததுதான் காரணம். கடுமையான பாதிப்பை ஏற்படுத்திய இந்த வெடிவிபத்தை, விபத்து நடந்த இடத்தில் இருந்து சுமர் 200 கி.மீ தொலைவில் உள்ள மக்கள் உணர்ந்ததாகவும் 3.5 ரிக்டர் அளவுக்கு அதிர்வுகள் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் நூற்றுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கடுமையாகப் பாதிப்படைந்துள்ளனர்.

லெபனான்
லெபனான்

இந்த விபத்து தொடர்பாக அந்நாட்டு அதிபர் பேசும்போது, ``இந்த விபத்தினை சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தக் கொடூர விபத்துக்கு காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உட்சபட்ச தண்டனைக் கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” என்று தெரிவித்தார். விபத்தில் சுமார் 2.50 லட்சம் முதல் 3 லட்சம் மக்கள் வரை வீடுகளை இழந்து பாதிப்படைந்துள்ளதாகவும் 3 பில்லியன் டாலர் முதல் 5 பில்லியன் டாலர் வரை சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு ஆட்சியாளர்கள் கணித்துக் கூறியுள்ளனர். இந்த நிலையில், துறைமுகத்தில் சேமித்து வைக்கப்பட்ட வேதிப்பொருள் தொடர்பான விசாரணைகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

விசாரணைக்காக துறைமுகத்தில் வேலை செய்து வந்த சுமார் 16 பேர் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக ஏற்கெனவே 18 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லெபனான் பெய்ரூட் துறைமுகம்
லெபனான் பெய்ரூட் துறைமுகம்

பெய்ரூட்டில் நடந்த விபத்தில் பாதிப்படைந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா பேசும்போது, ``லெபனானில் நடந்த வெடிவிபத்தில் இங்கு வசிக்கும் இந்தியர்களிடையே உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. எனினும், அவர்களுக்கு சிறிய அளவில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியத் தூதரகம் இந்திய மக்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் லெபனானுக்கு உதவ முன் வந்துள்ளன. 

நன்றி : vikatan.com

 

No comments:

Post a Comment

TIYA

WEBSITE DESIGNED BY: NOORUL IBN JAHABER ALI WEBSITE CONTROLLED BY: DOT COLORS
sourceNOORUL IBN JAHABER ALI Copyright © 2015

Theme images by Bim. Powered by Blogger.