
கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை வெறிச்சோடி காணப்படுகிறது, ஆள் அரவமற்ற சாலைகள், மனித கால்தடம் பதியாத கடற்கரைகள். இதுதான் இப்போதைய சென்னை நிலவரம்.
இந்நிலையில், தற்போதைய சென்னை மாநகரின் பழங்கால தோற்றத்தை விளக்கும் ஓவியங்களையும், புகைப்படங்களையும் இங்கே தொகுத்தளித்துள்ளோம்.
1860ஆம் ஆண்டு வரையப்பட்ட மதராஸ் நகரை குறிக்கும் படம். 1860களில்
அப்போதைய மதராஸின் துறைமுக பகுதியிலிருந்து ஜார்ஜ் கோட்டை இப்படித்தான்
காட்சியளித்தது. 1865இல் சென்னையிலுள்ள செயின்ட் ஜார்ஜ் கதீட்ரல்
கட்டடத்தின் தோற்றம். இந்தோ - சரசனிக் பாணியில் கட்டப்பட்ட சேப்பாக்கம்
ஆர்காட் நவாப் மாளிகையின் தோற்றம். இது 1880இல் வரையப்பட்டது.
சென்னை என்றாலே பலரது நினைவுக்கு வரும் மெரினா கடற்கரை
1891இல் இப்படித்தான் இருந்தது. 1902ஆம் ஆண்டு சென்னையில் நடந்த ஒரு
தேர்த்திருவிழாவை இந்த புகைப்படம் காட்டுகிறது. 1910இல் மூன்று பெண்கள்
ஒருவருக்கொருவர் தலையில் பேன் பார்க்கும் காட்சி. 1927ஆம் ஆண்டு நவம்பர்
மாதம் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் இருப்பது தற்போதைய சென்னை
உயர்நீதிமன்றம். 1929இல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், சென்னை
மாநகரின் நதியோரத்தில் அப்போது அமைக்கப்பட்டிருந்த தொழில்துறை சேமிப்பு
தொட்டிகள் தென்படுகிறது. பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் கோரி, 1930ஆம்
ஆண்டு சென்னை நகர வீதிகளில் காந்தியின் ஆதரவாளர்கள் பேரணி நடத்தியபோது
எடுத்த படம். 1935ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த புகைப்படம், அக்கால சென்னை
நகர வீதியின் நடப்பை காட்டுகிறது. 1961ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட சென்னை
நேதாஜி சாலையின் தோற்றம். 2000ஆவது ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் எருமை
மாடுகளை ஒருவர் குளிப்பாட்டும் காட்சி. சென்னை நொச்சிக்குப்பத்தில் சுனாமி
ஏற்படுத்திய பாதிப்பின் சுவடு மறையாத இடத்தில், உற்சாகமாக விளையாடும்
குழந்தைகள். சென்னை மாநகரின் அடையாளங்களில் ஒன்றான எல்ஐசி கட்டடத்தின்
தோற்றம் (ஜனவரி 04, 2006)
No comments:
Post a Comment