
சேலத்தில் இன்று கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியவை, கொரோனா காலத்திலும் நலத்திட்ட பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் மூலம் ஏரி, குளங்கள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. கொரோனா தொற்று குறைய, குறைய தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றனர். மாநகராட்சிகளிலும் சிறிய வழிபாட்டுத் தளங்களை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

சேலத்தில் போக்குவரத்து நெரிசல் கட்டுப்படுத்த பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. சாலை விரிவாக்க பணிகளும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. குடிநீர் திட்டம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிமராமத்து திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
டெல்டா பகுதிகளில் 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கூடுதலாக 5 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் எப்போது குழந்தைகளுக்கு பாதுகாப்பான நிலை ஏற்படுகிறதோ அப்போது தான் பள்ளிகள் திறக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment