ஐதராபாத் : தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு தினசரி நடத்தப்படும்
சோதனையை 50,000 ஆக உயர்த்த மாநில அரசு முடிவு செய்துள்ளதாக அதிகாரிகள்
தெரிவித்தனர்.தெலுங்கானாவில் கொரோனா தொற்றை குறைக்க மாநில அரசு தகுந்த
நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா தொற்றுக்கான நோயாளிகளை சோதனை
செய்தல், தடமறிதல், சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதல் ஆகியவற்றின்
வேகத்தை கட்டுப்படுத்த / பராமரிக்க மாநில சுகாதாரதுறை தினசரி நடத்தும்
சோதனைகளின் திறனை 50,0000 வரை உயர்த்த உள்ளது. மாநிலத்தில் முதல் தொற்று
பாதிப்பு மார்ச்.,2 ல் பதிவானது. ஆக.,21 க்கு முன்பு வரை தெலுங்கானாவில்
சராசரியாக 20,000 வரை சோதனைகள் நடத்தப்பட்டன.ஆகஸ்ட் 21 அன்று, சுகாதார
பிரிவு ஒரு நாளைக்கு 50,000 சோதனைகள் என்ற இலக்கை அடைவதற்கு ஒரு முக்கிய
மைல்கல்லை எட்டியது, அது ஒரு நாளைக்கு 43,095 கோவிட் சோதனைகளை நடத்த
முடிந்தது, ஆக., 22 அன்று மேலும் 40,666 கோவிட் சோதனைகளை மேற்கொண்டது.
நோய் தொற்றுக்கான பரிசோதனையில் விரைவான ஆன்டிஜென் சோதனை
(RAT) துவங்கப்பட்டதற்கு பின்பு சோதனையை அதிகரிப்பது எளிதானது /
சாத்தியமானது. சமீபத்தில் TSMSIDC 4 லட்சம் சோதனை கருவிகளை பெற்றது. இது
சோதனைகளை அதிகப்படுத்தவும் தூண்டியது. மாநிலத்தில் உள்ள நகர்ப்புற /
கிராமப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் ( Primary Health Center ) மிக
விரைவான சோதனை கருவிகளை சேமிக்கத் தொடங்கியுள்ளன, இதனால் உள்ளூர்
மருத்துவர்கள் தங்கள் சோதனைத் திறனை அதிகரிக்க அனுமதிக்கின்றனர்.அத்துடன்
பருவகால நோய்களும் ( Seasonal Disease ) அதகிகரிப்பதால் அதனை எதிர்கொள்ள
மக்களும், பொது சுகாதார துறை நிறுவனங்களும் தயாராகி வருகின்றன.
அதற்கான நடவடிக்கையாகவும், சோதனைகளை அதிகரிப்பது / ஒரு நாளைக்கு 50,000 கொரோனா சோதனைகள் மூலம், தொற்று பாதிப்புகளில் இருந்து வைரஸ் காய்ச்சலை முறையாகப் பிரிக்க முடியும் என்று மூத்த சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் சீனிவாச ராவ் கூறுகையில், எங்கள் முக்கிய குறிக்கோள் தினசரி 50,000 கொரோனா சோதனைகளை நடத்துவதாகும். வாரங்களில் அல்ல, வரும் நாட்களில் நாங்கள் அங்கு செல்ல வேண்டும் என்று நம்புகிறோம்.நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் (NIMS) Cobas RT-PCR கருவிகளை சேர்ப்பது, இது ஒரு நாளைக்கு 3,500 முதல் 4,000 சோதனைகளுக்கு இடையில் சேர்க்கப்படும், இது மாநிலத்தில் ஒரு நாளைக்கு 50,000 சோதனைகள் என்ற இலக்கை எட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கும். RT-PCR மற்றும் CB NAAT கோவிட் சோதனை வசதிகளும் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன, பல புதிய சோதனை மையங்கள் (ICMR) அனுமதி பெறுகின்றன, அவற்றின் எண்ணிக்கை 50 ஐ எட்டியுள்ளது. மாநில அரசு RT-PCR சோதனை வசதிகள் 17 மீதமுள்ள 33 RT-PCR சோதனை மையங்கள் மாநிலம் முழுவதும் உள்ள தனியார் ஆய்வகங்களில் கிடைக்கின்றன. இவ்வாறு தெரிவித்தார்.

No comments:
Post a Comment