
மதுரை: கைலாசா நாட்டில் ஹோட்டல் நடத்த தனக்கு அனுமதி வழங்க அனுமதி கோரிய
மதுரை ஹோட்டல் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட கலெக்டர்
மற்றும் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.சர்ச்சைகளில் சிக்கியுள்ள
நித்யானந்தா உருவாக்கியுள்ளதாக கூறப்படும் கைலாசா நாட்டில் ஹோட்டல் நடத்த
அனுமதி கோரி மதுரை டெம்பிள் சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் என்பவர் கடிதம்
எழுதியிருந்தார். அவர் எழுதிய கடிதத்திற்கு இணையம் வாயிலாக பதில் அளித்த
நித்தியானந்தா விரைவில் ஹோட்டல் அமைக்க அங்கீகாரம் வழங்கப்படும் என
தெரிவித்தார்.இந்நிலையில் டெம்பிள் சிட்டி ஹோட்டல் அதிபர் குமார் இந்திய
அரசுக்கு எதிராக செயல்படுவது மட்டுமில்லாமல், அரசால் தேடப்பட்டு வரும்
குற்றவாளி நித்தியானந்தாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவர் மீது நடவடிக்கை
எடுக்க வேண்டும் என மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர்
மாவட்ட கலெக்டர் மற்றும் மநகராட்சி போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு
அளித்துள்ளார்.இந்நிலையில் ஹோட்டல் குமார், காமெடிக்காக
நித்தியானந்தாவிற்கு கடிதம் எழுதியதாக குறிப்பிட்டுள்ளார்.
கைலாசாவில் ஹோட்டல் நடத்தும் எண்ணம் எதுவும் தனக்கு
இல்லை. என்னுடைய கடிதத்திற்கு நித்தியானந்தாவிடம் பதில் வரும் என்று
எதிர்பார்க்கவில்லை. கோடிக்கணக்கான இந்தியர்களின் குழப்பத்திற்கு தீர்வு
காணும் முயற்சியில் நான் அவ்வாறு கடிதம் எழுதினேன். இவ்வாறு குமார்
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment